25-02-2022 தினப்பலன்: சற்று கவலையான நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I மாசி 13 I வெள்ளிக்கிழமை I பிப்ரவரி 25, 2022

இன்றைய ராசி பலன்!

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மேஷம்

கடினமான நாளாக இருக்கும். சாதகமான சூழல் அரிதாகக் காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தை போக்கு காணப்படும். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சற்று கவலையான நாளாக இருக்கும். அதீத உணர்ச்சிப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இன்றைய நாளை சமாளிக்கலாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திச் சாதிக்கலாம். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதை விட அதிகமாக இருக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மிதுனம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். மன உறுதியுடன் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலையில் சாதிப்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவு செய்வீர்கள்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி காண்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் திறமையாக செயல்பட்டு வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் பிரச்னைகளைத் தவிர்க்க உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவைப் பராமரிப்பது அவசியம். குடும்பத்தில் கடுமையாக நடந்துகொள்வீர்கள். இதனால் நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கன்னி

சவால் மிகுந்த நாளாக இருக்கும். நிதானத்துடன் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சமாளிக்கலாம். வேலையில் ஆர்வம் குறையும். இதன் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். நட்புறவுடன் பழகுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

துலாம்

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சாதகமான நாளாக இருக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மிக காரியங்கள், பொழுதுபோக்கில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். வேலையில் தவறுகள் ஏற்படலாம். மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்காது. கையிருப்பு குறையலாம்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. இதனால் வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மோதல் போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே மனக் கசப்பு உருவாகலாம். வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கலாம்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மகரம்

மந்தமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். குடும்பத்தில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கும்பம்

சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். ஆர்வத்துடன் வேலையை செய்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். கையிருப்பு, சேமிப்பு அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மீனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். சிறப்பாக செயல்பட்டு சாதிப்பீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சுறுசுறுப்பாக வேலையை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.