28-02-2022 தினப்பலன்: இன்று நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்!

பிலவ ஆண்டு I மாசி 16 I திங்கட்க்கிழமை I பிப்ரவரி 28, 2022
இன்றைய ராசி பலன்!
மேஷம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை அடைய சாதகமான நாளாக இருக்கும். வேலை சூழல் புத்துணர்வுடன் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
தாமதங்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனச் சோர்வு ஏற்படலாம். மனதைப் புத்துணர்வுடன் வைத்திருப்பது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையை திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைவு இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும்.
மிதுனம்
அமைதியாக இன்றைய நாளை எதிர்கொள்வது நல்லது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தை போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கும். சிறிது பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். இது உங்கள் மனதில் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்காலத் தேவையை எதிர்கொள்ளத் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
சிம்மம்
மனதில் பதற்றமான உணர்வு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவு பாதிக்கப்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.
கன்னி
பதற்றமான நாளாக இருக்கும். இது மனதில் கவலையை ஏற்படுத்தும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைப் பெற்றுத் தர உதவும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் வீண் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மோதல், வாக்குவாதம் எழலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
துலாம்
மந்தமான நாளாக இருக்கும். இன்றைக்கு நடைபெறும் செயல்கள் எல்லாம் சுமுகமாக இருக்கத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவு குறைந்து காணப்படும். வீண் செலவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
சாதகமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேற இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை சூழல் உற்சாகம் மிகுந்ததாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் கவலையை அளிக்கும்.
மகரம்
சாதகமான நாளாக இருக்காது. எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள முயல வேண்டும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பும் கிடைக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நிதி நிலையை சமாளிக்கத் திணறுவீர்கள்.
கும்பம்
சுமுகமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனதில் நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்
செழிப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையில் திறமையை வெளிப்படுத்திச் சாதிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.