11-02-2023 இன்றைய ராசிபலன்- பணி உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடக்கும்

சுபகிருது வருடம் 2023 I தை 28 | சனிக்கிழமை 11-02-2023
மேஷம்
நீங்கள் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று சிறப்பாக பணியாற்றுவீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பழகுவீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும். வீட்டை புனரமைத்தல் பற்றி இருவரும் கலந்தலோசிப்பீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.சிறந்த வகையில் சேமிப்பீர்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் உங்கள் பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம். இன்று சிறந்த பலன்களைக் காண நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். கடின உழைப்பின் மூலம் தான் வெற்றி காண முடியும்.பணியிடத்தில் சமயோசித புத்தியை பயன்படுத்த வேண்டியது அவசியம். உங்கள் மனக்குழப்பத்தை உங்கள் துணையிடம் காண்பிக்காதீர்கள். அமைதியான மனநிலையில் இருப்பது சிறந்தது. இன்று நிதிநிலை சராசரியாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது. அதற்கு நீங்கள் சிறு கடன்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்
நீங்கள் விருந்துகளில் கலந்து கொள்ள நேரலாம். மற்றும் உங்களுக்கு பிரியமானவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்க நேரலாம். உங்கள் முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள். என்றாலும் பதட்டத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் துணையுடன் நட்பாக இருக்க முயல்வீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் ஏற்படும். இன்று நீங்கள் சிறிய கடன் வாக நேரலாம். மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க சிறிது பணத்தை சேமியுங்கள்.
கடகம்
உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் செயல்களை இன்று விரைந்து ஆற்றுவீர்கள். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் துணையுடன் உற்சாகமாக நடந்து கொள்வீர்கள். அவருடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்கும். நீங்கள் விரைந்து பணம் சம்பாதிப்பீர்கள்.இன்று துடிப்பாகவும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
உங்கள் அணுகுமுறையில் வன்மையை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். நிறைவேறாத உங்களின் லட்சியங்களுக்காக வருந்த வேண்டாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சிறப்பாக திட்டமிட்டால் முன்னேற்றம் காணலாம். நட்பான அணுகுமுறை மற்றும் இனிமையான வார்த்தை மூலம் உங்கள் துணையுடனான நட்பை இனிமையாக்கலாம். இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் செலவுகளை கண்காணியுங்கள்.இன்று செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படலாம். எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்.
கன்னி
உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று வெற்றி காண்பதற்கு முறையாக திட்டமிட வேண்டியது அவசியம். உங்கள் பணியில் தவறுகள் நேரலாம். பணிகளை முடித்து ஒப்படைப்பதற்கு முன் கவனமாக சரி பார்க்க வேண்டும். உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொள்வதன் மூலம் உறவில் மகிழ்ச்சியை தக்க வைக்க முடியும்.இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். ஆனால் பூர்வீக சொத்து அல்லது எதிர்பாராத வகையில் பணவரவு காணப்படும்.இன்று ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதிகப் பணிகள் காரணமாக தலைவலி ஏற்படலாம்.
துலாம்
இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். எந்தச் செயலிலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவதற்கு நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் சூடான விவாதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அமைதியாக இருப்பது சிறந்தது. இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். அனாவசியமாக பணம் செலவாகாமல் காத்துக் கொள்ளுங்கள். அதிக உடல் உழைப்பு காரணமாக தலைவலி ஏற்படலாம். காயம் ஏற்படாமல் இருக்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
தொடர் முயற்சி மூலம் இன்று நீங்கள் வெற்றி காணலாம். உங்கள் நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியில் உங்கள் திறமைக்கு பாராட்டு பெறுவீர்கள். உங்கள் துணையுடன் சிறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.இதனால் இருவர்க்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். ஊக்கத் தொகை அல்லது சலுகை வகையில் இன்று பண வரவு அதிர்ஷ்டம் காரணமாக ஏற்படும். இன்று நிறைந்த ஆற்றலுடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடையலாம். சிறந்த பலனைக் காண இன்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பணிக்கு அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் செயல்திறன் சிறப்பாக இருந்தாலும் நீங்கள் முழு திருப்தியடைய மாட்டீர்கள். உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். நட்பான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. காப்பீடு போன்ற வகையில் எதிர்பாராத பண வரவு காணப்படும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணத்தை கவனமாகக் கையாளவும்.
மகரம்
இன்று சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். உங்கள் தொடர்பாடலை கட்டுப்படுத்த வேண்டும். அதிக பதட்டம் காரணமாக பணியின் போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இருவரும் நல்ல புரிந்துணர்வையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வீர்கள். உங்களால் இன்று பணம் சம்பாதிக்க இயலும். என்றாலும் வீணான செலவு காரணமாக நீங்கள் சேமிக்க இயலாது. இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
கும்பம்
உங்கள் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்காவிடில் உங்கள் வளர்ச்சி பாதிக்கும். மதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் நேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்கள் துணையிடம் உங்களுக்கு அசௌகரியமான உணர்வு காணப்படும். இதை அவருக்கு தெளிவாக உரைப்பது சிறந்தது. இன்று சில நிதி கட்டுப்பாடுகள் காணப்படும். நிதியில் ஸ்திரத்தன்மை காண நீங்கள் உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும்.
மீனம்
பிரச்சினை அல்லது மனக் குழப்பம் காரணமாக இன்றைய நாளை அனுபவிக்கும் மனநிலை உங்களிடம் இருக்காது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் நல்லுறவை வளர்ப்பீர்கள். இன்று கணிசமான தொகை சம்பாதித்தாலும் தவிர்க்கமுடியாத செலவுகள் காரணமாக நீங்கள் பணத்தை தக்க வைத்துக்கொள்ள இயலாது.