15-02-2023 இன்றைய ராசிபலன்- ஆரோக்கியத்தில் கவனம் தேவை

சுபகிருது வருடம் 2023 I மாசி 3 | புதன்கிழமை 15-02-2023
மேஷம்
வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளதால் உரையாடத் தொடங்குமுன் முறையாக யோசிக்க வேண்டும்.வெளிப்படையான, அனுசரணையான அணுகுமுறை தேவை. உங்கள் பணிகளை துல்லியமாகவும் தரத்துடனும் மேற்கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் தகவல் பரிமாற்ற பிரச்சினை காணப்படும். நட்பான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவினங்கள் காணப்படும். உங்கள் கண்களில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்களின் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு வழி காட்டும். உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள். உங்களிடம் இன்று ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் தரமான நேரங்களை செலவழிப்பீர்கள். இதனால் உறவில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று சுதந்திரமான நிதிநிலை காணப்படும். இன்று பயனுள்ள சேமிப்பு திட்டங்களில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்
இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். பணியில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முயல்வீர்கள். இன்று சுதந்திரமான நிதிநிலை காணப்படும். இன்று வளமான நாளாக அமையும். இன்று ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்
இன்று சில பதட்ட நிலை காணப்படும். மூளைக்கு சிறிது ஓய்வு கொடுப்பதன் மூலம் சிறந்த முடிவை எடுக்க இயலும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை மேற்கொள்ளும்போது சில தவறுகள் நேரலாம். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது மிகவும் அவசியம். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. உங்கள் பொறுப்புகளை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்படலாம். அமைதியாக இருங்கள். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.
சிம்மம்
இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். தேவையற்ற கவலைகள் வருத்தம் அளிக்கும். அத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நல்லது. பணியில் செய்யும் தவறுகள் காரணமாக உங்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் பணியில் கவனம் தேவை. உங்கள் துணையுடனான உறவுமுறை சுமூகமாக இருக்காது. பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற குடும்ப பொறுப்புகள் காரணமாக செலவு அதிகரிக்கும். இதனை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். இன்று நீங்கள் சிறந்த திட்டங்கள் மூலம் பயன் பெறுவீர்கள். இன்று உங்கள் பணிக்கு பாராட்டு பெறுவீர்கள். கூடுதல் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் நண்பர் வீட்டு திருமணத்தில் பங்கு கொண்டு மகிழ்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இன்று வலுவான நிதி ஆதாரத்தை அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் சேமிப்பு ஆற்றலும் அதிகரிக்கும். உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
இன்று பணியிடச் சூழல் மகிழ்சிகரமாக இருக்காது. அதிகப் பணிகள் இருந்தாலும் அதைப் பற்றி கவலைபடாமல் இருங்கள். பணிகள் சுமூகமாக நடக்க கைதேர்ந்தவர்களின் ஆலோசனை பெறுங்கள். இன்று தேவையற்ற வார்த்தைகள் பேச வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இன்று தேவையற்ற செலவுகள் ஏறபடும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் அனைத்தும் சுமூகமாகச் செல்லும்.
விருச்சிகம்
இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். பதட்டமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது. உங்கள் பணிகளை திறம்பட ஆற்றும் ஸ்திரத்தன்மை காணப்படாது. சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது. இன்று மனக் குழப்பம் காரணமாக உங்கள் துணையிடம் அமைதி இழப்பீர்கள். அவசரம் காரணமாக தேவையற்ற பணச் செலவுகள் ஏற்படும். அதற்காக பிறகு வருந்த நேரலாம். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படலாம். ஒவ்வாமை காரணமாக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் கண் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
தனுசு
இன்று சில சவால்கள் எழ வாய்ப்புள்ளது. இன்று பாதுகாப்பின்மை காணப்படும். இது உங்கள் மகிழ்ச்சியை கெடுக்கும். ஆன்மீக ஈடுபாடு வெற்றியை அளிக்கும். பணிகளை குறித்தநேரத்தில் உங்களால் முடிக்க இயலாது. தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளவும். உங்கள் துணையுடன் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். சில பிரச்சினை காரணமாக இருவரிடையே மோதல் ஏற்படும். இந்த சூழ்நிலையை சமாளிக்க பிரச்சினயை தீர்க்க முயலுங்கள். அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் காரணமாக அதிக செலவுகள் ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.
மகரம்
இன்று ஆக்கப்பூர்வமான நாள்.இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலும். நீங்கள் தொழில் சார்ந்த முறையில் உங்கள் பணிகளை உற்சாகமாக முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் துணை உறவின் மதிப்பை புரிந்து கொள்வார். உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிறந்த நாள். இன்று உங்களால் அதிகமாக சேமிக்க இயலும்.
கும்பம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.சுய முன்னேற்றத்திற்க்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். முயற்சிகள் எளிதாக இருக்கும். நீங்கள் உங்களை மேம்படுத் திக்கொள்வீர்கள். உங்கள் பணியைப் பொறுத்தவரை திருப்தியான நிலை காணப்படும். தரமான பணிகளை வழங்கி மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியை பராமரிப்பீர்கள். சுமூகமான சூழ்நிலை காணப்படும். உறவில் நல்லிணக்கம் காணப்படும். இன்று அதிக பணவரவு காணப்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆன்மீக செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
மீனம்
உங்கள் நலத்திற்காக இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் இன்றைய நாளை சுமூகமாக்கலாம். வருவதை அப்படியே எதிர்கொள்ளுங்கள். பணியிடத்தில் ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. திருப்தி நிலை குறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் பேசும் போது பொறுமை இழப்பீர்கள். இது எதிர்மறை எண்ணத்தை உருவாக்கி உறவின் மகிழ்ச்சியை பாதிக்கும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். உங்கள் தாயின் உடல் நிலை குறித்த கவலை காணப்படும். இதனால் செலவுகள் அதிகரிக்கும்.