31-10-2021 தினப்பலன்: பலன்கள் மிகுந்த நாளாக இருக்கும்!

பிலவ ஆண்டு I ஐப்பசி 14 Iஞாயிற்றுக்கிழமை I அக்டோபர் 31, 2021
இன்றைய ராசி பலன்!
மேஷம்
பலன்கள் நிறைந்த சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைத் தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் வரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.
ரிஷபம்
சுமாரான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறையும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
மிதுனம்
மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சுமுக சூழழல் காணப்படும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.
கடகம்
மனக் குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடன் பிறந்தவர்கள், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பது கடினம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.
சிம்மம்
இன்று ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறைந்து, பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வேலை வழக்கம் போல செல்லும். குடும்பத்தில் அமைதியை தக்க வைக்க சகஜமாகப் பேசுவது நல்லது. நிதி நிலை சரியாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
கன்னி
சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலை சூழல் பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
துலாம்
நன்மையான நாளாக இருக்கும். வெற்றிகளைக் குவிப்பீர்கள். பெற்றோர், உறவினர் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலையை திட்டமிட்டுச் செய்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண இழப்புக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
கபதற்றம் இன்றி செயல்படவேண்டிய நாள். கடினமான உழைப்பை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பணப் புழக்கம் சரியா இருக்காது. செலவு அதிகரிக்கும்.
தனுசு
சிறப்பான நாளாக இருக்காது. மனதில் தன்னம்பிக்கை, புத்துணர்வு குறையும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். வழக்கமான வேலையைக் கூட செய்ய முடியாமல் அவதியுறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் நட்புறவான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்படலாம்.
மகரம்
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் இறங்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதில் அவ்வப்போது சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கலாம். குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நட்புறவு பராமரிப்பது நல்லது. பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பமான சூழல் மறையும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மீனம்
வாய்ப்புகள் நிறைந்த, மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. பிற்பகலுக்கு பிறகு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.