• July
    16
    Tuesday

Main Area

Main



விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்; #BlackHole கருந்துளையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது நாசா!

கருந்துளை புகைப்படம்
கருந்துளை புகைப்படம்
Loading...

கருந்துளை எனப்படும் Black Hole-ல் இருந்து தான் அண்டம் உருவானது என பிரபல விஞ்ஞானியான மறைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாமல் கருந்துளை என்பது ஒரு கற்பனை விஷயமாகவே இருந்து வந்தது.

ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிய போதிலும், அதனை படம் எடுப்பது எளிதான ஒன்றாக அவர்களுக்கு இல்லை. ஏனெனில், கருந்துளையானது தானும் ஒளியை வெளியே விடாது, அதன் மீது ஒளியை பாய்ச்சினாலும் பிரதிபலிக்காது. அளவில் சிறிதாக இருக்கும் ஒரு கருந்துளை, பெரும் சூரியனை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. அந்த அளவிற்கு அதனுடைய புவி ஈர்ப்பு விசை மிகவும் சக்தி வாய்ந்தது.

black hole

ஒருபொருளை புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால், அந்த பொருளிலிருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி நமக்கு கிடைக்க வேண்டும். அந்த பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியை காட்சிபடுத்தும் அளவுக்கு நுட்பமான தொலைநோக்கி வேண்டும். அதாவது, பூமியளவு பெரிய தொலைநோக்கியால் மட்டுமே இதனைக் காண முடியும்.

பால் வீதியில் எத்தனையோ கோடி ஒளி மைல்கள் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை தொலைநோக்கிகள் மூலம் படம் எடுத்த விஞ்ஞானிகளுக்கு கருந்துளையை படம் எடுப்பது சாத்தியமற்றதாகவே இருந்து வந்தது. இதையடுத்து, கருந்துளை குறித்து அறிய, கடந்த 2012-ஆம் ஆண்டில் 'ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப்' எனும் தொலைநோக்கி திட்டத்தை நாசாவுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் குழு அமைத்தது. பூமியின் பல பகுதியில் உள்ள 8 ரேடியோ டெலஸ்கோப்களை ஒருங்கிணைத்து பூமியளவு மெய்நிகர் (virtual) தொலைநோக்கியாக உருவாக்கப்பட்டது தான் இந்த 'ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப்'  திட்டம்.

black hole

இதன் மூலம் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வந்த விஞ்ஞானிகள்,  26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ‘சாகிட்டாரிஸ் ஏ’ எனும் முதல் கருந்துளையையும், 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள விர்கோ விண்மீன் மண்டலத்தில் M87 கோள்களுக்கு மையத்தில் இருக்கும் மற்றொரு கருந்துளையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ள கருந்துளையை சுற்றியிருக்கும் ஒளிவட்டம், உள்ளே இழுக்கப்படும் வாயு, உச்சபட்ச வெப்பத்தில் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதையும் வாசிங்க

பணமதிப்பிழப்பு நடவடிக்கை; காங்கிரஸ் புதுக் குண்டு!

2018 TopTamilNews. All rights reserved.