• July
    16
    Tuesday

Main Area

Main



சீயான் விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பாலா! தொடரும் வர்மா சர்ச்சை 

பாலா- சீயான் விக்ரம்
பாலா- சீயான் விக்ரம்
Loading...

சென்னை: சீயான் விக்ரமுக்கு ஆதித்யா வர்மா படம் தொடர்பாக இயக்குநர் பாலா வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா 'வர்மா' என்ற பெயரில் இயக்கி வந்தார். துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பனிதா சந்து நடித்துத்திருந்தார். படம்  
எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தைத் தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட்  நிறுவனம் கைவிட்டது. 

அதையடுத்து இப்படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என்று மாற்றி அர்ஜுன் ரெட்டி படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்கிவந்தார். அதையடுத்து படத்தின் படப்பிடிப்பு விபரங்கள் பற்றி எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது திடீரென்று படம் முழுமையாக முடிவு அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 

varma

இந்த நிலையில் பாலா, நடிகர் சீயான் விக்ரம்க்கு திடிரென வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பேசப்பட்டுவருகிறது. அதன்படி தற்போது உருவாகியுள்ள 'ஆதித்யா வர்மா' படத்தில் சில முக்கிய காட்சியை மட்டும் ரீ ஷூட் செய்துவிட்டு தான் எடுத்த பகுதிகளை பயன்படுத்தப்போகிறார்களோ என்ற சந்தேகம் பாலா மனதில் எழுந்துள்ளது. 

இதனால் 'வர்மா’ பட காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று பாலா எச்சரித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.