• July
    22
    Monday

Main Area

Main



'யாரு எந்த கட்சியின் புரியறதுக்குள்ள 100நாள் ஓடிவிடும்': வெளியானது பிக் பாஸ் நியூ புரோமோ!

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
Loading...

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் புதிய புரோமோ விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் முதன்மை வாய்ந்த ஒன்று என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்து இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பவுள்ளது. 

அதற்கான புரோமோக்கள் விடீயோக்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த முறை யார்யாரோ கலந்து கொள்ளப்போகிரகர்கள் போட்டிகள் எப்படி இருக்கும், பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் ரசிங்கர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்க சரியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் புதிய புரோமோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் 'நடிகர் கமல்ஹாசன், வாரம் ஒரு தலைவர், தினமும் ஒரு சண்டை யார் எந்த கட்சின்னு புரியறதுக்குள்ள 100 நாட்கள் ஓடிவிடும், பிக்பாஸ் 4 டேஸ் டூ கோ என்று மிகவும்  கெத்தாகப் பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.