• October
    17
    Thursday

Main Area

Main



'இனிமே என்கிட்ட பேசாத': கவின்-லாஸ்லியா இடையே சண்டை மூட்டிவிட்ட வனிதா 

கவின்- லாஸ்லியா
கவின்- லாஸ்லியா

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் தற்போது வெளியாகியுள்ளது.   

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 17 நாட்கள் வெற்றிகரமாக கடந்து விட்டது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் சண்டை சச்சரவுமாகச் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயத்திலும் வனிதா மூக்கை  நுழைப்பது தான். அதனால் கண்டிப்பாக அவரை இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்துள்ளனர். 

las

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் வனிதா தனது சண்டையை ஆரம்பித்துவிட்டார். லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டதைச் சாக்ஷி பார்த்து கோபித்துக் கொண்டனர். பின்பு அதை பற்றி ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, அதை வழக்கம் போல் வனிதா ஒட்டுக்கேட்டு விட்டு எல்லோர் முன்னிலையிலும் கூறுகின்றார்.

 கவினை, லாஸ்லியா தவிர்த்து வரும் நிலையில் வேண்டுமென்றே அவரக்ளை கோர்த்து விட்டு வனிதா சாசியைப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் லாஸ்லியா கடுப்பாகிவிடுகிறார். கடைசியில் வனிதா நினைத்து வெற்றிகரமாக நடந்து விட்டது. 

அதனால் லாஸ்லியா, கவினை அழைத்து இனிமே நீ என்னிடம் பேசாதே என்று அழுது கொண்டே சொல்வது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.