• April
    25
    Thursday

Main Area

Main



ஓவியாவுடன் காதல்? : பிக் பாஸ் ஆரவ் ஓபன் டாக்!

oviyaa
oviyaa
Loading...

சென்னை:  நானும் ஓவியாவும் காதலிக்கிறோம்  என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட  காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். இந்த நிலையில் ஆரவ்வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் மீண்டும் நெருக்கமாகி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

oviya

இந்நிலையில் இது குறித்து பத்திரிகை ஒன்றிற்குப்  பேட்டியளித்துள்ள ஆரவ், எனக்குக் காதல் கதை  படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன். ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறையக் கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர்.
அதனால் ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் எனச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர்'  என்று கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.