• January
    21
    Monday

Main Area

Main

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனை மணந்தார் பிக் பாஸ் சுஜா வருணி!

sujavarunee
Loading...

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் நடிகர் சிவக்குமாருக்கும், பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுஜா வருணி. இவரும், சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்ற சிவக்குமாரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சுஜா மற்றும் சிவக்குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கள் பரவ தொடங்கிய நிலையில், இருவரும் தங்களது காதல் குறித்த அறிவிப்பினை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள அடையார் கிரவும் பிளாசாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்துக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் சுஜா, சிவக்குமார் தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.