• May
    26
    Sunday

Main Area

Main



பிக் பாஸ் சீஸன் 3’... அடடே அவருமா? அந்த மூன்று பேரை கன்ஃபர்ம் செய்த விஜய் டி.வி...

பிக் பாஸ் 3
பிக் பாஸ் 3
Loading...

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களை பெற்று பிரபலமடைந்து. குறிப்பாக பெண்கள் சீரியலை கூட மறந்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

இந்த நிலையில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 

bigg boss

அதில் நடிகைகள் லைலா, சுதா சந்திரன், ரமேஷ் திலக் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் முவருமே இதனை மறுத்தனர்.

bigg boss 3

இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று திரையுலக பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் யாரு என்றால் நடிகை சாக்சி அகர்வால், நடிகை அல்யா மானசா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் வரும் ஜூன் மாதத்திலிருந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.