• March
    21
    Thursday

Main Area

Main



ஐயப்பனை தரிசித்த இரண்டு பெண்களும் மாயம்? அதிர்ச்சியில் கேரள போலீஸ்!

kanakadurga
kanakadurga
Loading...

திருவனந்தபுரம்: ஐயப்பனை தரிசித்த இரண்டு கேரள பெண்கள் தற்போது வரை வீடு திரும்பவில்லை என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில்லுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியிருந்தாலும், கோயிலுக்குள் இளம்பெண்கள் செல்வதற்கு இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் கடந்த 2-ம் தேதியன்று போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயில்லுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.

bindhu

இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரும் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர், பாஜகவினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கும் ஒரு படி மேலாக, பிந்து, கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்களின் வீடுகளையும் தேடி கண்டுபிடித்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் தலைமறைவான இரண்டு பெண்களும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், தற்போது வரை இருவரும் வீடு திரும்பாததால், அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.