• July
    18
    Thursday

Main Area

Main



உங்களால் தான் இந்த படுகொலை நடந்தது: கிளிண்டன் மகளிடம் சண்டைக்கு நின்ற கல்லூரி மாணவிகள்: வைரல் வீடியோ!

கிளிண்டன் மகளிடம் வாக்குவாதம் செய்யும் மாணவி
கிளிண்டன் மகளிடம் வாக்குவாதம் செய்யும் மாணவி
Loading...

நியூயார்க் : நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்ஷியா கிளிண்டனை மாணவிகள் சரமாரியாகத் திட்டி தீர்த்தனர்.

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு 
newzealand ttn

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவன் அதைச் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பிய தகவல் அந்நாட்டு மக்களை குலைநடுக்க வைத்துள்ளது. இந்த கொடூர தாக்குதலில் ஈட்டுப்பட்ட குற்றவாளி பிரண்ட்டன் டர்ரண்ட் என்ற இளைஞர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.  

இரங்கல் நிகழ்ச்சியில் கிளிண்டனின் மகள்
clinton ttn

இந்நிலையில், நியூசிலாந்தில்  துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர்களுக்காக நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இரங்கல் நிகழ்ச்சியில்,   அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்ஷியா கிளிண்டன் கலந்து கொண்டார். 

மாணவிகள் வாக்குவாதம் 
 

அப்போது அவரை கண்ட  இஸ்லாமிய மாணவிகள்  கடுங்கோபத்துடன் செல்ஷியா கிளிண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வெளியான வீடியோவில், லீன் ட்வீக் என்ற மாணவி, 'நீங்கள் பார்க்கும் இந்த நிகழ்வு, உங்களைப் போன்றவர்களாலும், நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளாலும் தூண்டப்பட்ட படுகொலையின் விளைவு' என்று நேருக்கு நேர் நின்று கடுமையாக சாடினார்.  இந்த வீடியோவானது  சமூக வலைத்தளங்களில் தற்போது  வைரலாகி வருகிறது

2018 TopTamilNews. All rights reserved.