• June
    27
    Thursday

Main Area

Main



போன தடவை 15 லட்சம் வாங்கிட்டீங்கல்ல? இந்தா வாங்கிக்க 100 லட்சம் கோடி ரூபாய்!!! மோடி லகலகலகலக‌

Modi
Modi
Loading...

நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் அளவுக்கு மக்கள் ஆதரவளித்தால், விவசாயிகளுக்கு ரொக்க மானியம், ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவது, ஜிஎஸ்டியில் மாற்றம் உள்ளிட்ட வாக்குறுதிகளோடு, மற்றொரு முக்கிய வாக்குறுதியையும் தேர்தல் அறிக்கையில் பாஜக கூறி இருந்தது. அதன்படி, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருந்தது.

BJP Manifesto

இதன்படி பார்த்தால், அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெறவேண்டும். மத்திய அரசின் பட்ஜெட், தோராயமாக 400 பில்லியன் டாலர் அதாவது 28 லட்சம் கோடி ரூபாய். அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என்றால், ஒவ்வொரு வருடமும் தோராயமாக 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டி இருக்கும். ஆனால்,கடந்த ஆண்டு சாலை போக்குவரத்து மற்றும் ரயில்வே துறைக்காக‌ ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ஒரு லட்சத்து 20,000 கோடி மட்டுமே. அப்படி இருக்கையில், இந்த 25 லட்சம் கோடி ரூபாய் மொத்த பட்ஜெட்டில் 90% அளவுக்கு வரும். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டுமே 90% ஒதுக்கீடு செய்ய வாய்ப்பே இல்லை.

Finance Minister

எனவே, வருவாயை இரட்டிப்பாக்குவதுதான், இந்த 100 லட்சம் கோடி ரூபாய் பணிகளை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முதல் கடமையாக இருக்கும். ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே வருவாயை இரட்டிப்பாக்குவது என்பது குதிரைக்கொம்பு. அப்படி செய்ய முடிந்திருந்தால், கடந்த ஆட்சியிலேயே செய்திருப்பார்கள். அதுவும்போக, அவசர கால நிதி என ரிசர்வ வங்கி கட்டுப்பெட்டியில் ஒளித்து வைத்திருக்கும் 10,000 கோடியைக்கூட உருவி எடுக்கும் அளவுக்கு நிதிநிலைமை மோசமாக இருக்கிறது. வெறும் 10,000 கோடியை பெறுவதற்கே ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலை பதவியைவிட்டு விரட்ட வேண்டி இருந்தது. அதைவிட 1000 மடங்கு கூடுதல் தொகையான 100,00,00,000,00,000 கோடியை புரட்டுவதற்கு எவ்வளவு நாட்கள் தேவைப்படும் எவ்வளவு கூடுதல் வரிவிதிக்க வேண்டியிருக்கும் என்பதை எல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். முந்தின தேர்தலின்போது அளித்த ஆளுக்கு 15 லட்சம் கோடி வாக்குறுதி உண்மை என இன்னும் நம்பும் ஆட்கள் இருக்கும் இடத்தில், இந்த 100 லட்சம் கோடி வாக்குறுதியும் உண்மையானதாகதானே இருக்கமுடியும்?

2018 TopTamilNews. All rights reserved.