• July
    18
    Thursday

Main Area

Main



ரூட் போட்டுக் கொடுத்த பாஜக... அன்புமணியை அலற வைக்கும் அதிமுக..!

அன்புமணி
அன்புமணி
Loading...

பாமக தலைவர் ராமதாஸை அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து அதிர வைக்க காத்திருக்கின்றன.eps

பாமகவுக்கு கூட்டணி ஒப்பந்தத்தின்படி 7 சீட்களும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. இந்த 7 தொகுதிகளில் மொத்தமாக வாஸ் அவுட் ஆனது பாமக. இந்நிலையில் ராஜ்யசபா சீட் குறித்து பாஜக தரப்பு, ‘’பாமக தரப்பினர் எப்போதும் நம்மை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்கள். தேர்தல் ஒப்பந்தம் தேர்தலோடு முடிந்துவிட்டது. இப்போது தேர்தல் இல்லை. எனவே, ராஜ்யசபா சீட் தர முடியாது என்று கூறிவிடுங்கள்.

ramadoss

 அவர்கள் ராஜ்யசபாவிற்கு வந்தாலும் நமக்கு எதிராகதான் பேசுவார்கள். ஏற்கனவே ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பலம் குறைவாக இருக்கிறது. இந்த தருணத்தில் அவர்களுக்கு சீட் கொடுத்தால் அவர்கள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து சேலம் எட்டுவழி சாலை திட்டம், நீட் போன்றவற்றை எதிர்த்து பேசுவார்கள். அதன் மூலம் தேவையில்லாத பிரச்னை வரும். உங்கள் தலைவி பாணியில் சீட் இல்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளுங்கள். அல்லது நேரில், போனில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். அந்த சீட்டை உங்கள் கட்சியின் சீனியர்களுக்கு கொடுங்கள். நாங்களும் உங்களுக்கு அமைச்சர் பதவி விரிவாக்கத்தின்போது கவனிக்கிறோம்...’’என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். anbumani

பாஜகவே சொன்னபின்பு அதிமுக அதை தட்டிவிடுமா? அன்புமணிக்கு சீட் இல்லை என்கிற முடிவை அதிமுக எப்போதோ தீர்மானித்து விட்டது. 

2018 TopTamilNews. All rights reserved.