• July
    18
    Thursday

Main Area

Main



முதல் ஆட்டத்திலேயே சென்சூரி அடித்த காம்பீர் : எப்படி தெரியுமா?

காம்பீர்
காம்பீர்
Loading...

பாஜக சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் முன்னிலை வகிக்கிறார். 

gambir

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்  கவுதம் காம்பீர் இதையடுத்து காம்பீர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்று கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் கவுதம் பாஜகவில் இணைந்தார். 

bjp

இதை தொடர்ந்து  கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை விட முன்னிலை பெற்றுள்ளார். கவுதம் காம்பீர்  சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் ம் ஆத்மி வேட்பாளரை  பின்னுக்கு தள்ளியுள்ளது அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கிய துவக்கமாக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.தற்போது பாஜக 348 இடங்களிலும்  காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 104  இடங்களிலும் முன்னிலை வைக்கிறது. இதனால் மீண்டும் மோடியே பிரதமராவார்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

  

2018 TopTamilNews. All rights reserved.