• July
    20
    Saturday

Main Area

Main



டிடிவி தினகரன் + எடப்பாடி பழனிசாமி + பாஜக + தேர்தல் ஆணையம் = சசிகலா விடுதலையும் திமுக வீழ்ச்சியும்?!

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்
Loading...

திமுகவை வீழ்த்த பாஜக, எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் டிடிவி தினகரன் உடன் சேர்ந்து சதி செய்வதாக பொது வெளியில் விமர்சிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையமும், பாஜகவும் டிடிவி தினகரனை மிகவும் ஒடுக்குவது போல் சித்தரிக்கப்படுகிறது! அதாவது சின்னம் வழங்காமல் டிடிவி தினகரனை தேர்தல் ஆணையம் அலைக்கழிப்பது, மக்களுக்கு தினகரன் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காகதானாம்!

டிடிவி

தமிழக மக்களை பாஜக வஞ்சிப்பதாய் கருதும் மக்கள், அக்கட்சியோடு கூட்டணி அமைத்த அதிமுக மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்! நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக தரப்பு ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி பெறும் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாம்! அதனால் டிடிவி தினகரன் பக்கம் சாய்வதென அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது!

ttv

தேர்தல் ஆணையம் தினகரனுக்கு சின்னம் வழங்க மறுக்கும் நாடகம் தொடர்ந்து அரங்கேறும், அதனால் மக்களுக்கு அவர் மீது அனுதாபம் ஏற்பட்டு வாக்களிக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் திமுகவை வீழ்த்துவதுதான் அதிமுக தரப்பின் திட்டம்! இதற்கு டிடிவி தினகரன் எப்படி ஒப்புக்கொள்வார் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்! சசிகலா விடுதலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். அதிமுக தரப்புக்கு தினகரன் உதவும் பட்சத்தில், பாஜக உதவியோடு சசிகலா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

சசி

டிடிவி தினகரனுக்கு அதிமுகவினர் மீது ஜென்ம பகையெல்லாம் கிடையாது. அதிமுகவில் உள்ளவர்கள் என் அண்ணன், தம்பி போல! அதிமுகவை மீட்பதே என் லட்சியம் என அவரே ஒருமுறை கூறியிருக்கிறார்! திமுகவை வீழ்த்துவதுதான் இவர்களின் டார்கெட், அதற்காக அனைவரும் மறைமுகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது! இதனை திமுக தரப்பு எப்படி எதிர்கொள்ளும் என்பது தெரியவில்லை.

 

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்

2018 TopTamilNews. All rights reserved.