• March
    24
    Sunday

Main Area

NewsDesk's blog
ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்பு இந்திய டெலிகாம் துறையில் ஒரு அசாத்திய மாற்றம் ஏற்பட்டது. அந்நிறுவனம் அடியெடுத்து வைத்த வேகத்தில் இலவச வாய்ஸ்கால், இலவச மெசேஜ், இலவச 4ஜி டேட்டா ஆகியவற்றை அள்ளிக் கொடுத்து கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்பக்கம் சாய்த்தது. இதனால் பல டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவில் நாளுக்கு நாள் ஜியோ சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இந்தத் தகவல் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தின்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேருக்கும் மேலாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடியாக உயர்ந்துள்ளது.

NewsDesk Fri, 03/22/2019 - 16:16
Jio gainers in January 2019 Jio adds 9.3 million new connections Vodafone loses 3.5 million ரிலையன்ஸ் ஜியோ ஜியோ வாடிக்கையாளர்கள் வோடபோன் ஐடியா jio தொழில்நுட்பம்

English Title

Jio, BSNL are top gainers in January 2019: Jio adds 9.3 million new connections, Vodafone loses 3.5 million

News Order

7

Ticker

0
ஆழ்துளைக்கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தை

60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த குழந்தை - மீட்புப்பணி தீவிரம்

ஹரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கமல் கமீலா நாசர்

சொந்தக் குடும்பத்தைத் தவிக்க விட்ட கமீலா நாசர் - இது உங்க கண்ணுக்கு தெரியலையா கமல் ?

நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மேல் இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்...

சின்மயி

பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை சொல்ல வைரமுத்துவுக்கு என்ன தகுதி இருக்கிறது ? - சின்மயி கேள்வி

பாலியல் குற்றவாளிகளுக்கு அறிவுரை கூற வைரமுத்துவை எப்படி அனுமதிக்கிறீர்கள் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினகரன் பத்திரிகை அலுவலகம்

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

பரியேறும் பெருமாள்

கன்னடத்தில் ரீமேக் ஆக இருக்கும் பரியேறும் பெருமாள் - ஹீரோ பரியன் யார் தெரியுமா ?

கதிர், ஆனந்தி நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆக இருக்கிறது.

வைரமுத்து

வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள்...அது போல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை! - கவிஞர் வைரமுத்து.  

அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இயக்கத்தில் வந்த படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு மீடியாக்களின் பங்களிப்பும் முக்கியம்.அதற்கு நன்றி தெரிவிக்...

twitter birthday

இன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது? எவ்வளவு சம்பாரிக்கிறார்கள் தெரியுமா?

இன்று உலகில் அநேகம் பேரால் விரும்பப்படும் சமூக வலைத்தளமான ட்விட்டருக்கு பிறந்த நாள். அதாவது ட்விட்டர் தளத்தில் முதல் செய்தி இன்று தான் பகிரப்படாதாம். அது சரி இந்த ட்விட்டர் எப்படி ...

2018 TopTamilNews. All rights reserved.