அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 270 அதிகரிப்பு..

 
இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 270 அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.  
 

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்னர் அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது தங்கம் விலை..   சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, தங்கத்தை சிறந்த முதலீட்டுக்கான புகலிடமாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.  இந்தியாவைப் பொறுத்தவரை   பெண்கள்  தங்கத்தின் மீதான முதலீட்டை  சிறந்த சேமிப்பாகவும், லாபகரமானதாகவும் பார்க்கின்றனர்.  தங்கத்தின் மவுசு கூடி அதன் விலை அதிகரிக்க இதுவே  முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாள் விலை அதிகரிப்பதுமாக இருந்து வரும் தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்திருக்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்நிலையில் சென்னையில் கடந்த  வார இறுதியில் ( மே 7 ஆம் தேதி)  தங்கம் விலை அதிரடியாக  39, ஆயிரத்தை தாண்டி விற்பனையானது .  அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.4,877க்கும்,   ஒரு சவரன்  ரூ. 39,016  க்கும்  விற்பனையானது.  அதன்பிறகு இந்த வாரம் தொடர்ந்து குறைந்துவந்த தங்கம்,  நேற்று சவரனுக்கு ரூ.  ரூ. 472  குறைந்தும்   ஒரு சவரன் தங்கம் ரூ. 38,296 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து,   ஒரு கிராம் ரூ.  4,835  க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சவரனுக்கு ரூ. 270 அதிகரித்து   8 கிராம் கொண்ட  ஒரு சவரன் ஆபரணத் தங்கம்   ரூ. 38,680 க்கு  விற்கப்படுகிறது.   அதேபோல்  வெள்ளி விலையும் உயர்ந்திருக்கிறது.   சென்னையில் நேற்று 64.50  ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி விலை, இன்று 50  காசுகள் உயர்ந்திருக்கிறது.  அதன்படி  ஒரு கிராம் வெள்ளி ரூ 65 க்கும்,  ஒரு கிலோ வெள்ளி 65 ஆயிரம் ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.