கடந்த அக்டோபரில் வாகன விற்பனை சுமார்..பஜாஜ் ஆட்டோ, எஸ்கார்ட்ஸ் விற்பனையில் பின்னடைவு

 
பஜாஜ் ஆட்டோ

கடந்த அக்டோபரில் பஜாஜ் ஆட்டோ, எஸ்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளது. அதேசமயம் டொயோட்டோ வாகன விற்பனை சிறிது அதிகரித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 4.39 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 14 சதவீதம் குறைவாகும். 2020 அக்டோபர் மாதத்தில் 5.12 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. குறிப்பாக கடந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்நாட்டில்  2.18 லட்சம் இரு சக்கர வாகனங்களை  மட்டுமே விற்பனை செய்துள்ளது.  இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 22 சதவீதம் குறைவாகும்.

எஸ்கார்ட் டிராக்டர்

விவசாய கருவிகள் மற்றும் என்ஜினீரியங் தயாரிப்பு நிறுவனமான எஸ்கார்ட்ஸ், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 13,514 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. 2020 அக்டோபர் மாதத்தில் எஸ்கார்ட்ஸ் நிறுவனம் மொத்தம் 13,664 டிராக்டர்களை விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த அக்டோபர் மாதத்தில் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 1.1 சதவீதம் சரிவு கண்டுள்ளது.

டொயோட்டா

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 12,440  வாகனங்களை  விற்பனை செய்துள்ளது. அதேசமயம் 2020 அக்டோபர் மாதத்தில் 12,373 வாகனங்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்து இருந்தது. ஆக கடந்த மாதத்தில்  டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்  நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் உயர்ந்துள்ளது