வர்த்தக துளிகள்... சமையல் எண்ணெய் விலையை லிடருக்கு ரூ.10 குறைத்த அதானி

 
அதானி வில்மர்

நாட்டின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் நிறுவனமான அதானி வில்மர் நிறுவனம், சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது. மத்திய அண்மையில் சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான வரியை குறைத்த அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் சமையல் எண்ணெய் விலையை குறைத்துள்ளதாக அதானி வில்மர் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் சந்தை  மதிப்பு அடிப்படையிலான டாப் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு  ரூ.3.91 லட்சம் கோடி குறைந்தது. குறிப்பாக டி.சி.எஸ்.  நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1.01 லட்சம் கோடி குறைந்தது. கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சரிவு கண்டாலும், அந்நிறுவனம் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற வங்கிகள்  பிக்சட் டெபாசிட்டுகளுக்கன வட்டி விகித்தை உயர்த்தின. தற்போது ஆக்சிஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான குறிப்பிட்ட கால முதிர்வு நிலையான வைப்புநிதிக்கான (எப்.டி.) வட்டி விகிதத்தை  0.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

நயாரா

மத்திய அரசு உலகளாவிய சேவை கடமைகளின் கீழ் அனைத்து சில்லரை பெட்ரோல் பங்குகளையும் கொண்டு வந்துள்ளது. இதனால்  ரிலையன்ஸ், பிபி, ஷெல் மற்றும் ரோஷநிப்ட் ஆதரவு கொண்ட நயாரா  போன்ற தனியார் எரிபொருள் சில்லரை விற்பனை ஆபரேட்டர்கள்  தங்களது அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் நியாயமான விலையில் எரிபொருள் சப்ளையை (விற்பனை) பராமரிக்க வேண்டும்.