வர்த்தக துளிகள்.. இறக்குமதி செய்யப்படும் எக்ஸ்ரே இயந்திரங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக அதிகரிப்பு

 
எக்ஸ்ரே இயந்திரம்

எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் நான் போர்ட்டபிள் எக்ஸ்ரே ஜெனரேட்டர்கள் இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் போர்ட்டபிள் எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் நான் போர்ட்டபிள் ஜெனரேட்டர்கள் மற்றும் கருவிகள் மீது 10 சதவீதம் விதிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் மேலும் 5 சதவீதம் அதிகரிக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக கிராமப்புற வேலை உறுதி சட்டம் திட்டத்தின் கீழ் ஊதிய விகிதங்கள் மாற்றம் குறித்த அறிவிக்கை வெளியிட்டது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, ரூ.7 முதல் ரூ.26 வரையிலான ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மாநிலங்களுக்கான ஊதிய உயர்வு 2 முதல் 10 சதவீதம் வரை இருக்கும்.

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, ஒழுங்குமுறை தேவைகள் போன்றவற்றால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணிகள்

விமான துறை ஆலோசனை நிறுவனமான சி.ஏ.பி.ஏ. இந்தியா அறிக்கையின்படி, 2023-24ம் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான பயணிகளின் வரத்து 39.5 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 27.5 கோடியிலிருந்து 32  கோடியாக உயரும். இதே காலத்தில் வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை5.80 கோடியிலிருந்து 7.5 கோடியாக அதிகரிக்கும்.