’BSNL-க்கு மாறுவோம்' - கட்டண உயர்வால் ட்விட்டரில் குமுறும் நெட்டிசன்கள்..

 
representative image

ஏர்டெல், வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியது. ஜியோவின் வருகைக்குப் பின்னர் தங்களது வாடிக்கையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் இந்நிறுவனங்கள், வர்த்தக ரீதியாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

1

அதனால் இந்த நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தி கடந்த வாரம் அறிவித்தன. இந்தக் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவன்ங்களின் வாடிக்கையாளர்கள், ஜியோவுக்கு மாறிவிடுவது தான் சிறந்தது எனக் கூறி வந்தனர்.

2

இந்நிலையில் நேற்று, ரிலையன்ஸ் ஜியோவும் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. 21% வரை உயர்த்தப்பட்டுள்ள இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

3

இதனால், அனைவரும் பிஎஸ்என்எல் (BSNL) க்கு மாறுவோம் என இணையவாசிகள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். #BoycottJioVodaAirtel #BSNL என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வரும் இணையவாசிகள், கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் BSNLக்கு மாறுவதுதான் ஒரே வழி என பதிவிட்டு வருகின்றனர்.

4