வர்த்தக சிலிண்டர்கள் விலை மேலும் ரூ.101 உயர்வு.. உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி...

 
Commercial LPG cylinder

சென்னையில் வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலை 101 ருபாய் உயர்ந்து  ரூ. 2,234 க்கு விற்பனை செய்யபப்டுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  நிர்ணயித்து வருகின்றன.

Petrol Gas

இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களிம் விலை மாதம் இருமுறை மாற்றம் செய்யப்படுகிறது.  அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் ரூ. 694 க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை , கொஞ்சம் கொஞ்சமாக விலையேற்றம் செய்யப்பட்டு தற்போது ரூ. 915. 50 ஆக உள்ளது.

Commercial LPG cylinder

இந்நிலையில் இந்த (டிசம்பர்) மாதத்திற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு  அறிவித்திருக்கிறது. அதில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்ப. அதேவேளையில், உணவகங்கள், கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு  வர்த்தக சிலிண்டர் ரூ. 2,234.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் வர்த்தக சிலிண்டர்களின் விலை 770 ரூபாய் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விலையேற்றம் உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவுப்பொருள் சார்ந்த வியாபாரிகல் கலக்கமடைந்துள்ளனர். மேலும் சிலிண்டர் விலையேற்றத்தால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.