தொடர்ந்து 2வது மாதமாக வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு...

 
Commercial LPG cylinder

டெல்லியில்  வணிக பயன்பாட்டிற்கான  வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 91.50 குறைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  நிர்ணயித்து வருகின்றன.  இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களிம் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Commercial LPG cylinder

இந்நிலையில், இன்று   வர்த்தக  பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த  மாதம் புத்தாண்டு  தினத்தன்று  வர்த்த  சிலிண்டர் விலை ரூ.102.50 வரை குறைக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக இந்த மாதமும்  வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை 91 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டுள்ளது.  இந்த விலை குறைப்பு இன்று முதல்(பிப் 1)  நடைமுறைக்கு வருகிறது. சிலிண்டர் விலை  ரூ.91.50 விலை குறைக்கப்பட்டு   ரூ.1907 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Gas

விலைக் குறைப்பால் இன்று முதல் டெல்லியில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1907க்கு , கொல்கத்தாவில் ரூ. 1,983 க்கும், மும்பையில் ரூ.1,859. 5 க்கும்,  சென்னையில் 2,043 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.  இருப்பினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான 14 கிலோ, 10 மற்றும் 5 கிலோ  சிலிண்டர்கள்  விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.  இந்த விலை குறைப்பால் உணவக மற்றும் தேநீர் கடை உரிமையாளார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.