வரலாறு காணாத வகையில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு..

 
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து,  வரலாறு காணாத அளவில்  83.02 ஆக வீழ்ச்சிய்டைந்துள்ளது.  

கடந்த 2 ஆண்டுகளில்  கொரோனாவால்  உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  அதனை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  உலக பொருளாதாரத்தை மீட்பது சவாலாகி வருகிறது.  மேலும், போர்ச்சூழல் காரணமாக   கச்சா எண்ணெய், உணவு தானியங்களில் விலையும்   அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  

வரலாறு காணாத வகையில் சரிந்த இந்திய  ரூபாயின் மதிப்பு..

இதன் காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பொருட்களின் விலை  உயர்ந்து  பணவீக்கம் அதிகரித்துவிட்டது.  பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.  அதேபோல்  பல  நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கின்றன.  வட்டி விகித அதிகரிப்பு மற்றும்  அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பையும் கூட்டியிருக்கிறது. அதேநேரம்  பல நாடுகளும் தங்களது முதலீட்டினை  டாலருக்கு மாற்றி வருவதாலும் அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது.

வரலாறு காணாத வகையில் சரிந்த இந்திய  ரூபாயின் மதிப்பு..

அதுமட்டுமின்றி,  இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம் போன்ற காரணங்களால்,   அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிவை சந்தித்து  வருகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு  நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 காசுகள் சரிந்து,  வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 83.02 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.