இல்லத்தரசிகளுக்கு ஒரு இன்ப செய்தி.. அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 472 குறைந்து ஒரு சவரன் 38,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

கடந்த சில மாதங்களாகவே  தங்கம் விலை அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்னர் சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை சிறந்த புகலிடமாக கருதுகின்றனர்.  தங்கத்தின் மீதான் முதலீட்டை  சிறந்த சேமிப்பாகவும், லாபகரமானதாகவும் கருதுகின்றனர்.  ஆகையால் தங்கத்தின் மவுசு கூடி, அதன் விலையும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.  அப்படியே ஏதோ ஒரு நாள் விலை குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் விலை அதிகரித்து விடுகிறது.  இருப்பினும் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது..  

இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இந்நிலையில் சென்னையில் கடந்த  வார இறுதியில் ( மே 7 ஆம் தேதி)  தங்கம் விலை அதிரடியாக  39, ஆயிரத்தை தாண்டி விற்பனையானது .  அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.4,877க்கும்,   ஒரு சவரன்  ரூ. 39,016  க்கும்  விற்பனையானது.  அதன்பிறகு இந்த வாரம் தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 152 குறைந்தது, அதனைத்தொடர்ந்து இன்றும்  சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு 59 ரூபாயும், சவரனுக்கு ரூ. 472  குறைந்திருக்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.  4,787  க்கு விற்பனை செய்யப்படுகிறது.  8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ. 38,296 க்கு விற்கப்படுகிறது.   அதேபோல்  வெள்ளி விலையும் சரிவை சந்தித்திருக்கிறது.  சென்னையில் நேற்று 66 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி விலை, இன்று 1 ரூபாய் 30 காசுகள் குறைந்திருக்கிறது.  ஒரு கிராம் வெள்ளி ரூ 64.80 க்கும்,  ஒரு கிலோ வெள்ளி 64 ஆயிரத்து 800 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.