வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு..

 
gold


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, தங்கத்தின் விலை அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  தங்க  முதலீடு  சிறந்த சேமிப்பாகவும், லாபகரமானதாகவும் பார்க்கப்படுவதால்,   தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே  இருக்கிறது.   ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாள் விலை அதிகரிப்பதுமாக இருந்து வரும் தங்கம் விலை,  கடந்த வார இறுதியில்  அதிரடியான சரிவை சந்தித்து, சவரன் ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான  இன்று உயர்வை கண்டிருக்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

 அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து   ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்)விலை  4,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 37,952க்கு விற்பனையாகிறது. சென்னையில் நேற்று 63 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையான  வெள்ளி, இன்று 8 காசுகள் அதிகரித்திருக்கிறது.  இன்று   சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.50 ஆக உள்ளது.   ஒரு கிலோ வெள்ளி  ரூ. 64,500க்கு விற்கப்படுகிறது.