ஓ.என்.ஜி.சி. வருவாய் 1.63 லட்சம் கோடி.. லாபம் 18 சதவீதம் வளர்ச்சி..

 
ஓ.என்.ஜி.சி.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.14,134 கோடி ஈட்டியுள்ளது. 

பொதுத்துறை நிறுவனமான ஆயில் அண்டு நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.14,134 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.11,937 கோடி ஈட்டியிருந்தது.

ஓ.என்.ஜி.சி.

2023 ஜூன் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.63 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும். 2022 ஜூன் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.82 லட்சம் கோடி ஈட்டியிருந்தது. 

ஓ.என்.ஜி.சி.

2023 ஜூன் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3 சதவீதமும், மொத்த எரிவாயு உற்பத்தி 3 சதவீதமும் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.81 சதவீதம் குறைந்து ரூ.177.15ஆக இருந்தது.