ஹீரோ, டிவி.எஸ்., ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனை படுஜோர்..

 
ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த ஜூன் மாதத்தில் ஹீரோ, டிவி.எஸ்., ராயல் என்பீல்டு ஆகிய நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4,84,867 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 4,69,160 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

ராயல் என்பீல்டு

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 61,407 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 43 சதவீதம் அதிகமாகும். 2021 ஜூன் மாதத்தில் மொத்தம் ராயல் என்பீல்டு நிறுவனம் 43,048 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 3,08,501 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 22 சதவீதம்  அதிகமாகும். அந்த மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி மொத்தம் 2,51,886 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.