• April
    24
    Wednesday

Main Area

Main



உலக சாதனையில் இடம் பெறவேண்டிய எம்.ஜி.ஆர் பெயர்...ஜஸ்ட் மிஸ்!

சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்ட்ரல் ரயில் நிலையம்
Loading...

சென்னை: உலகிலேயே நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் என்னும் சாதனையைச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு எழுத்தில் தவறவிட்டுள்ளது. 

central train station

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் ரயில் கருதப்படுகிறது. தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இது  சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகவும் உள்ளது. சமீபத்தில் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. 

central

அதன்படி கடந்த 5 ஆம் தேதி, புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத்தில் சென்னை என்ற வார்த்தை நீக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. மேலும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது தமிழக அரசின் இந்த  அரசாணை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். 

chennai

இந்நிலையில் உலகிலேயே அதிக எழுத்துகள் கொண்ட பெயர் பெற்ற ரயில் நிலையம் என்ற சாதனையை சென்ட்ரல் ரயில் நிலையம் தவறவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் புது பெயர் 57 எழுத்துகளைக் கொண்டது. ஆனால்  வேல்ஸ் ரயில் நிலையம் 58 எழுத்துகளைக் கொண்டுள்ளதால் அது உலகிலேயே மிக நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற சாதனையைத் தட்டி சென்றது.  இதனால் ஒரு எழுத்தில் அந்தச் சாதனையை தவறவிட்டுள்ளது சென்ட்ரல் ரயில் நிலையம்.

ஒருவேளை புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை என்ற பெயரை நீக்காமல் இருந்திருந்தால், சென்ட்ரல் ரயில் நிலையம் தான் உலக சாதனை படைத்திருக்கும் என்று சென்னைவாசிகள் பலர் ஆதங்கப்படுகிறார்கள். ம்ம்ம்... கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சு...! 
.

இதையும் வாசிக்க:  ஸ்ரீதேவி மகனை மணக்கும் 45 வயது பாலிவுட் நடிகை!? என்ன சொல்கிறார் மலைக்கா

2018 TopTamilNews. All rights reserved.