• May
    26
    Sunday

Main Area

Main



காசுக்கொடுத்து வாங்கும் குடிநீரிலும் கலப்படம்! 

Water
Water
Loading...

உணவுபொருட்களில் செய்யப்பட்ட கலப்படம் உருமாறி தற்போது குடிநீர் கேன்களில் தஞ்சம் அடைந்துள்ளது. 

கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, சென்னையின் கோயம்பேடு, கெளத்தூர் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுகாதாரமற்ற  5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரமற்ற முறையில் குடிநீர் உற்பத்தி செய்த 53 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

தரமற்ற, சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதால் கிட்னி, ஒவ்வாமை, போன்ற பிரச்னைகளை ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமிழகம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலவதியான குடிநீர்களை விற்பனை செய்தால் குடிநீர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.  

2018 TopTamilNews. All rights reserved.