• May
    21
    Tuesday

Main Area

Main



'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' பட்டத்தை பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை வாரிசு: குவியும் பாராட்டு!

லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம்
Loading...

அமெரிக்கா: அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தைத் தட்டிச்சென்றுள்ளார். 

 அமெரிக்காவில் ' தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்'  என்ற  நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த  பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை  ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளிலிருந்து  கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து கொண்டனர். இதில்  ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த பியானா கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.

 

lydian ttn

லிடியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலைத் தொடர்ந்து பெற்று வந்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில்  இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்த லிடியனுக்கு ' தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் பரிசு தொகையாக 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7 கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது.

lydian ttn

ஒரு கையால் மிஷன் இம்பாசிபில் தீம் மியூசிக் வாசித்துக்கொண்டே மறு கையால் ஹாரிபாட்டர் தீம் மியூசிக்கை வாசிப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு பியோனா இசை, கைகளை பின்பக்கமாகத் திருப்பியே பியோனா வாசிப்பது என்று லிடியனின் சாகசங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

லிடியனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.