• March
    24
    Sunday

Main Area

Main



செட்டிநாடு ஸ்பெஷல்: உருளைக் கிழங்கு தக்காளி      

உருளைக் கிழங்கு தக்காளி  
உருளைக் கிழங்கு தக்காளி  
Loading...

தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு - 250 கிராம் 

பெரிய வெங்காயம் - 50 கிராம் 

பூண்டு - 4 பல் 

தக்காளி - 2

உப்பு - தேவியான அளவு 

சாம்பார் தூள் - 2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

சோம்பு, மிளகு - தலா 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் பூ  - 2 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

தாளிக்க - சோம்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை 

செய்முறை:

உருளைக் கிழங்கை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். எண்ணையை காயவைத்து சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு, தக்காளி வதக்கி, உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.  பின்பு சாம்பார் தூள், உப்பு, சோம்பு, மிளகு, தேங்காய் பூ , கசகசாவை நைசாக அரைக்கவும். கடைசியாக காய்கறி வதங்கியதும், அரைத்த விழுதைப் போட்டு மஞ்சள் பொடி சேர்த்து, எண்ணை பிரியும் வரை வதக்கி, தண்ணிர் ஊற்றி கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும்.  

                                                                                                     

2018 TopTamilNews. All rights reserved.