• July
    21
    Sunday

Main Area

Main



“தாயில்லாத கிராமம்” பாசமில்லாமல் தவிக்கும் குழந்தைகள்..!

Mothersday
Mothersday
Loading...

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டுவருவதையொட்டி அனைவரும் அவரவர் அன்னையை நினைவுக்கூர்ந்து பல்வேறு கருத்துகளை சமுகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அன்னைகளே இல்லாத ஓர் கிராமம், அன்னையின் அரவணைப்பில் வளராத பிள்ளைகள்.... அந்த கிராமம் எங்குள்ளது? ஏன் அங்கு அம்மாக்கள் இல்லை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

இந்தோனேசியாவின் கிழக்கு லம்போக் பகுதியில் அமைந்துள்ளது வனசபா என்ற கிராமம்.  இங்குள்ள அனைத்து இளம் குழந்தைகளும் தங்களது பாட்டி, தாத்தா வீடுகளில்தான் வளருகின்றனர். ஏனெனில் இங்குள்ள தாய்மார்கள் அனைவரும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிடுவார்கள். ஏன் அந்த குழந்தைகளின் தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாமே என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் இங்குள்ள ஆண்கள் அனைவருமே படிக்காதவர்கள் எனவே பெரும்பாலும் அனைவரும் விவசாயிகளாகவும், கூலித்தொழில் பார்ப்பவர்களாகவே உள்ளனர்.

குடும்பத்திற்காகவும், பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த கிராமத்திலிருக்கும் தாய்மார்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததுடன் சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றுவிடுகிறார். தாயின் அரவணைப்பில்லாமல் வளரும் வனசபா கிராம குழந்தைகள் தாயை பார்ப்பது செல்போனில் மட்டும்தான். பிள்ளைகள் படித்து, அவர்கள் சம்பாதிக்கும் நிலைக்கு வரும்வரை வெளிநாடுகளிலேயே வேலை செய்கின்றனர். மாதமாதம் பணம் மட்டும் வருவதை பார்க்கும் குழந்தைகள் தாய் வரவில்லையே என்ற ஏக்கத்துடனே வளர்கின்றன. குழந்தைகளுக்கு கல்வியையும் சிறந்த வாழ்க்கையையும் கொடுக்கவேண்டும் என்பதற்காக நாட்டையும் கடந்து பணியாற்றிவருகின்றனர் வனசபா கிராமத்தில் வசிக்கும் தாரகைகள்.... 
 

2018 TopTamilNews. All rights reserved.