• February
    18
    Monday

Main Area

Main

யானைகள் முகாமிற்கு அனுப்பப்படும் சின்னதம்பி? வனத்துறை பதில்

chinnathambi
chinnathambi
Loading...

சென்னை: சின்னதம்பி யானையை பிடித்து முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அப்போது லாரியில் ஏற்றும் போது சின்னத் தம்பியின் தந்தங்கள் உடைந்தது. மேலும், கும்கி யானைகள் குத்தியதில் அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னதம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது.

சின்னதம்பி யானை குறித்து கருத்து தெரிவித்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து சின்னதம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கோவை தடாகம் பகுதியிலுள்ள செங்கற் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரியும் இருவேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முந்தைய விசாரணையின் போது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்ததில் இருந்து 10-ஆம் தேதிவரை சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வனத்துறையினர் அறிக்கைத் தாக்கல் செய்தனர். அப்போது, வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா, சின்னதம்பியை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்துவிடுவதாகத் தெரிவித்தார். அதனால், மிகவும் சாதுவாக மாறிவிட்ட சின்னதம்பியை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது சிரமம். சின்னதம்பியை பிடித்து முகாமில் அடைப்பது ஒன்றே வழி என்றும் வனத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

முன்னதாக உடுமலை அருகே கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள காட்டுயானை சின்னதம்பியை பிடிக்க மாற்று கும்கி யானையான சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.