• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்: அட அது லஞ்சம் இல்லைங்க...கன்சல்டன்சி ஃபீஸ்- இடைத்தரகர் மைக்கேல்

christianmichel

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் தான் வாங்கியது லஞ்சம் இல்லை. அது கன்சல்டன்சி ஃபீஸ் என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது ஆட்சிக் காலத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, இந்த ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், விசாரணையின் போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த தலைவர்களுக்கோ, பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கோ லஞ்சம் எதுவும் வழங்கப்படவில்லை என திட்டவட்டமாக கிறிஸ்டியன் மைக்கேல் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து தான் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ள அவர், அது லஞ்சம் இல்லை எனவும், அப்பணத்தை கன்சல்டிங் கட்டணமாக பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

             
2018 TopTamilNews. All rights reserved.