தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் ‘இவருக்கு’ சம்பளம் 120 கோடியாம்… அதிர்ச்சியில் திரையுலகம்!
Jan 24, 2020, 12:26 IST1579848988000
இந்தியாவில் ஒரு படத்திற்கு மிக அதிக சம்பளம் பெரும் நடிகர் என்கிற பெருமை சேரும்
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராகவே உள்ளார். தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் தனுஷ் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக நடிகை சாரா அலிகான் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கவுள்ளார். அவருக்கு இப்படத்தில் நடிக்க சம்பளமாக 120 கோடி ரூபாய் தரவுள்ளதாக பாலிவுட் சினிமா இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒருவேளை இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் ஒரு படத்திற்கு மிக அதிகமான சம்பளம் பெரும் நடிகர் என்கிற பெருமையை அக்ஷய் குமாரை சேரும். இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.