குடிப்பது நல்ல பழக்கம் இல்லை ஆனால், எனக்கு குடிப்பழக்கம் உண்டு- விஜய் சேதுபதி
கருத்தை பாருங்க, பிடிச்சிருந்தா பயன்படுத்துங்கள் ஆனால் கருத்தை சொல்பவரை பார்க்காதீர்கள் என சென்னையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.
சென்னை லயோலா கல்லூரி ஓவஷன் ( ovation ) கடைசி தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். விஜய் சேதுபதியின் வருகையின்போது மாணவர்கள் கரகோஷங்கள் எழுப்பி கொண்டாடினர். பின்பு கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக விஜய் சேதுபதிக்கு நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “எனக்கு லயோலா கல்லூரியில் படிக்க மிகவும் ஆசை. ஆனால் நான் எடுத்த 700 மதிப்பெண்ணுக்கு இங்கு இடம் கிடைக்கவில்லை. ஜெயின் கல்லூரில் பி.காம் படித்தேன். ஆனால் எனது மகன் இங்கு ஆங்கில துறையில் படிப்பது எனக்கு மகிழ்ச்சி. குடிப்பது நல்ல பழக்கம் இல்லை ஆனால், எனக்கு குடிப்பழக்கம் உண்டு.
இந்த வியாபார உலகம் உங்கள் நேரத்தை திருட பார்க்கிறது. சமூக வலைத்தளங்கள் போலி சுதந்திரத்தை வழங்குகிறது. கேள்வி ஞானம் தான் சிறந்த அறிவுக்கு வழிவகுக்கும். “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” இதுவே எனக்கு மிகவும் பிடித்த குறள். கருத்தை பாருங்கள், கருத்து சென்னவர்களை பார்க்காதீர்கள். கருத்து பயன்பட்டல் பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வளவுதான். யாரும் யாரிடமும் தோல்வியடையவில்லை. அதேபோல் யாரும் யாரிடமும் வெற்றி பெறவும் இல்லை.” என தெரிவித்தார்.