ஆஸ்கர் விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை.. அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு ஆஸ்கர் கமிட்டி நன்றி..

 
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய வில் ஸ்மித்..

நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில், ஆஸ்கர் விருது மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்ள நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில்   94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், பிரபல ஹாலிவுட் நடிகர் வில்  ஸ்மித் கன்னத்தில் அறைந்தார்.  தனது  மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடி குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித், விழா மேடையில் இவ்வாறு நடந்துகொண்டது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே அதிர்ச்சியி ஏற்படுத்தியது.

will smith
அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற வில் ஸ்மித்,   மேடையிலேயே தமது செயலுக்கு அவர் கண்ணீர்மல்க  மன்னிப்பு கோரினார். அதனைத் தொடர்ந்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிறிஸ் ராக்கிடம் வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மனைவியின் மருத்துவ நிலை குறித்து கிண்டல் செய்ததை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என  ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார். மேலும்  ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த வில் ஸ்மித்,  ஆஸ்கர் கமிட்டியின் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். 

 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது.

இந்தனிடையே இந்த விவகாரம்  தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அகாடமி அமைப்பு, ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில்  வில் ஸ்மித் பங்கேற்க  10 ஆண்டுகள் தடை விதித்துள்ளன. ஆஸ்கர் மேடையில் ஸ்மித்தின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும்,   அந்த அசாதாரண சூழ்நிலையிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அகாடமி கூறியுள்ளது.