சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற வில் ஸ்மித்.. தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு..

 
 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித் வென்றார்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். முன்னதாக தனது மனைவியை கிண்டல் செய்ததற்காக  தொகுப்பாளரும், நடிகருமான கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்ததால் ஆஸ்கர் மேடையே பரபரப்பானது.  

2022 ம் ஆண்டிற்கான  94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த  நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு கிடைத்திருக்கிறது. 'கிங் ரிச்சர்ட்'  திரைப்படத்தில் நடித்ததற்காக முதன்முறையாக  விஸ் ஸ்மித்  ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது.

பிரபல வீராங்கனைகள்  செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின்,  நிஜ வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட இந்த ‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் ரிச்சர்ட் வில்லியம்ஸாக நடித்த வில் ஸ்மித் நடித்திருந்தார். அவரது சிறந்த நடிக்கை  பாராட்டும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

1992 ஆம் ஆண்டு வெளியான ’வேர் தி டேஸ் டேக் யூ’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வில் ஸ்மித்,  பேட் பாய்ஸ், இண்டிபெண்டஸ் டே, மென் இன் ப்ளாக், திரைப்படங்கள் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கி உலகளவில் ரசிகர்களை பெற்றவர் வில் ஸ்மித்.. 2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை தட்டித் தூக்கிய வில் ஸ்மிஸ், முன்னதாக விழா மேடையில் தொகுப்பாளாரை கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது.

வில் ஸ்மித் மனைவியின் ஹேர் ஸ்டைலை தொகுப்பாளரும், நடிகருமான கிற்ஸ் ராக் கிண்டல் செய்தார். அதற்கு ஆஸ்கர் விருது விழா மேடையிலேயே வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சர்வதேச அளவிலும் ட்ரெண்டானது. தன் பிறகு ஆஸ்கர் விருது கிடைத்ததும்,  அதற்கு மன்னிப்புக் கேட்டு அதனை சரிசெய்தார்.   தொடர்ந்து விருது வென்றதற்காக கண்கலங்கியபடி பேசி நல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார். விழா மேடையில் கண்கலங்கியபடி வில் ஸ்மித் பேசும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.