'நீங்க இல்லாம நான் இல்ல’.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. - நடிகர் சிம்பு

 
நீங்க இல்லாம நா இல்ல: ‘ரெட் கார்ட்’ விவகாரத்தில் ரசிகர்களை சமாதானம் செய்த சிம்பு  

உலகம் முழுவதும் 2022  ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது.. கோயில்கள், தேவாலயங்களில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி உலகமே புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியுடன்  வரவேற்கிறது.

அந்தவகையில் நடிகர் சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “ என் பாசத்திற்குரிய அனைவருக்கும்... வணக்கம்..
நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம் . பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு  மீண்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.

2022

இறைவனின் பெருங்கருணையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம்.  தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை  மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு.  மிக பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக்கொள்கிறேன்.

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரிலும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திர்க்கை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே வாழ்க.. நீங்க இல்லாம நான் இல்ல...  என்றும் அன்புடன்... உங்கள் சிலம்பரசன்.. “ என்று குறிப்பிட்டுள்ளார்.   

சிம்பு புத்தாண்டு வாழ்த்து