பாலியல் புகாரில் நடிகர் சித்திக்கை கைது செய்ய தடை நீட்டிப்பு..!!

 
Siddique

சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய விதித்த தடையை  மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து “ஹேமா கமிட்டி” அறிக்கை தாக்கல் செய்த பிறகு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  அதில் 2016ம் ஆண்டு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர விடுதியில் மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக துணை நடிகை  ஒருவர் கேரள மாநில டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். இது தொடர்பாக கேரள மாநில சிறப்பு விசாரணை குழு (SIT) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கில் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

 பாலியல் புகாரில் நடிகர் சித்திக்கை கைது செய்ய தடை நீட்டிப்பு..!!

இந்த வழக்கு கடந்த 24ம் தேதி வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சித்திக், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். கடந்த செப்.30 இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , மனு மீது பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டதோடு,  நடிகர் சித்திக் கைது செய்ய இடைக்கால தடை விதிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர். 

supreme court

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  எட்டு ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளதே? என கேள்வியெழுப்பினர்.  இதற்கு பதிலளித்த  கேரளா அரசு வழக்கறிஞர், “2019ல் ஹேமா கமிட்டி அறிக்கை வந்தது. உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல பெண்கள் புகார் அளித்து வருகின்றனர். 30 எஃப். ஐ .ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது . தன்னால் எதையும் நினைவு படுத்த முடியவில்லை என நடிகர் சித்திக் கூறுகிறார்.  அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை ; ஆதாரங்களை அழிக்க முற்படுகிறார்” என குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சித்திக் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.கிரி அவகாசம் கோரினார், அதனையேற்ற நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் அதே நேரத்தில் சித்திக் மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ள விதித்த தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.