இந்தியா முதல் உலகக்கோப்பை வென்ற வரலாறு .. ’83’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு - டெல்லி அரசு அறிவிப்பு...

 
83 movie

ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘83’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக டெல்லி அரசு அறிவித்திருக்கிறது.


1983ம் ஆண்டு இந்தியா முதன் முறையாக உலகக் கோப்பை வென்ற வரலாற்றுக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  திரைப்படம் ‘ 83’.கபீர்கான் இயக்கியுள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவாக ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்தாக ஜீவாவும் நடித்துள்ளனர். கபில் தேவ்  மனைவி கதாப்பாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் ரியல் ஜோடியான தீபிகா படுகோன் நடிக்கிறார்.  

83-movie

முதன் முறையாக கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது, கபில் தேவின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை  மையமாக வைத்து 83’ படம்  உருவாகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ’83’ திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  அத்துடன் டிசம்பர் 24 ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

83-movie

1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாளன்று  ங்கிலாந்தில்  புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டிருந்ததால்,  இந்தியா முதல் உலகக் கோப்பை வென்ற வரலாற்றின்  ஒளி வடிவம் இல்லாமல் போனது.  அதனால் இந்தத் திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  தற்போது  '83'  திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.