தனுஷின் ‘வாத்தி’... தனுஷ் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தின் டைட்டில் ரிலீஸ்..

 
வாத்தி போஸ்டர்

தனுஷ் ஏற்கனவே இந்தி, ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளில் நேரடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் நேரடியாக களம் கான இருக்கிறார்.  தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்ஹாசனைத் தொடர்ந்து நேரடியாக மற்ற மொழிப்படங்களில் நடிக்கும் ஒரே நடிகர் தனுஷ் தான்..  அவர் அடுத்து நடிக்கவுள்ள தெலுங்கு படத்தின்  டைட்டில் போஸ்டர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் தனுஷ் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

அதன்படி நடிகர் தனுஷ்  நேரடியாக தெலுங்கில் நடிக்கும் முதல் படத்திற்கு ‘சார்’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.  இயக்குநர் வெங்கட் அட்லுரி எழுதி இயக்கும் இந்தப் படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ட்சுன்  நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.  வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

வாத்தி போஸ்டர்

இந்நிலையில் ‘சார்’ அதாவது ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப்படத்தில் நடிகை சம்யுக்தா மேனம் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  தனுஷின் முதல்  தெலுங்கு படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டில் அசத்திவரும் தனுஷ் , டோலிவுட்டிலும் ஹிட் படங்களை கொடுத்து கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.