’மாநகர காவல்’ திரைப்பட இயக்குனர் மறைவு.. ஆதரவின்றி தெருவோரம் இறந்து கிடந்த சோகம்..

 
தியாகராகன்

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாநகரக் காவல்’ . சுமா, நாசர், எம்.என்.நம்பியார், லட்சுமி, செந்தில், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை இயக்குநர் எம். தியாகராஜன் இயக்கியிருந்தார். ஏவிஎம்-ன் 150 படமாக இந்தப் படம் வெளியாகியிருந்தது.

மாநகர காவல்

இந்நிலையில் இயக்குநர் தியாகராஜன் இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டூடியோ எதிரில் தெருவோரமாக  அனாதையாக இறந்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், இயக்குநர் தியாகராஜனின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் தியாகராஜன், ஆதரவின்றி இறந்துகிடந்த சம்பவம் திரையுலகினரையும், பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாநகர காவல்