அட பாவமே இயக்குநர் செல்வராகவனையும் தாக்கிய கொரோனா.. மக்களுக்கு அட்வைஸ்!

 
செல்வராகவன்

இந்தியா முழுவதும் 3ஆம் அலை வேகமெடுத்து வருகிறது. முதல் இரண்டு அலைகளில் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அதேபோல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், நடிகைகள் திரிஷா, மீனா, குஷ்பு, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கீர்த்தி சுரேஷ் என பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைச் செய்தாலே மனதுக்குள் எங்கிருந்தோ உற்சாகம் வந்து விடுகின்றது'' - இயக்குனர்  செல்வராகவன் | nakkheeran

அனைவரும் தற்போது மீண்டுவிட்டார்கள். லதா மங்கேஷ்கருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்சினை இருப்பதால் அவருக்கு இன்னமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் இயக்குநரும் நடிகரும் செல்வராகவன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "எனக்கு இன்று (ஜனவரி 23) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.