’கடைசி விவசாயி’ படக்குழு மீது இசைஞானி இளையராஜா புகார்...

 
என் பாடல்கள் மீதான தடை தொடர்கிறது: இளையராஜா ஆவேசம்!

கடைசி விவசாயி படத்திலிருந்து, தன்னுடைய அனுமதி பெறாமலே தான் அமைத்துக்கொடுத்த இசையை மாற்றியிருப்பதாக  படக்குழு மீது இசையமைப்பாளார் இளையராஜா புகார் தெரிவித்திருக்கிறார்.

காக்கா முட்டை திரைப்படம் மூலம் தமிழ் திரையிலகில் கவனம் பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். இவர் அடுத்தடுத்து இயக்கிய ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. மணிகண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும்   திரைப்படம் ‘ கடைசி விவசாயி’. இந்தப்படத்தில் நல்லாண்டி எனும்  முதியவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன்  விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கடைசி விவசாயி

இயக்குனர் மணிகண்டனே இந்தப் படத்தையும் தயாரித்து இருக்கிறார். கடைசி விவசாயி படத்திற்கு முதலில் இசைஞானி  இளையராஜா தான்  இசையமைத்திருந்தார்.  பின்னர் படக்குழுவினருக்கும் இளையராஜா தரப்புக்கும் ஏற்பட்ட மனச்சங்கடம் காரணமாக அவர் விலகியிருக்கிறார். பின்னர் சந்தோஷ் நாராயணன் படக்குழுவுடன் இணைந்தார். மேலும் படக்குழுவினர் படத்திலிருந்து இளையராஜாவின் இசையை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணின் இசையை கோர்த்து படத்தை தயாரித்து விட்டனர். 

கடைசி விவசாயி

படப்பிடிப்பு முடிந்து நீண்ட  நாட்களாக, கொரோனா  காரணமாக முடங்கிக் கிடந்த இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது .  இதையொட்டி கடந்த மாதம்  21 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலரும் வெளியானது. அதன் பின்னரே படத்திலிருந்து தனது இசை மாற்ற ப்பட்டிருப்பதை அறிந்த  இளையராஜா,  தன்னுடைய அனுமதியின்றி இசையமைப்பாளரை மாற்றி இருப்பதாகவும்,  தன்னுடைய  இசையை மாற்றியதாகவும் இசையமைப்பாளர் சங்கத்தில் படக்குழுவினர் மீது புகார் அளித்திருக்கிறார்.