‘ஜெயிலர்' படத்தின் முதல் பாடல்' ஜூலை 6ம் தேதி வெளியாகிறது

ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169வது படமாக உருவாகியுள்ளது ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ் ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ’Kaavaalaa’ பாடல் வரும் 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் தனது படங்களில் வழக்கமாக பாடல்கள் வெளியாவதற்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து கலக்கலான ப்ரோமோ வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த ப்ரோமோ வீடியோக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளை பெறும். அந்த வகையில் தற்போது ஜெயலர் திரைப்படத்தின் முதல் பாடலான "காவாலா" பாடலை அறிவிக்கும் வகையில் புது ப்ரோமோ வீடியோவை நெல்சன் ஸ்டைலில் படக்குழு வெளியிட்டுள்ளது.